தமிழ்நாடு

திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

webteam

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்திய திமுக நிர்வாகிகள் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சென்னை முழுவதும் உள்ள 3 தொகுதியிலும் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள 3 மக்களவைத் தொகுதியில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடத்தியதால் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை அயனாவரம் கான்ஸ்டெபிள் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது அதில் மத்திய சென்னை வேட்பாளர்கள் தயாநிதிமாறன், வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை வழக்கறிஞர் அணிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளஞ்செழியன் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர்.

இதனையடுத்து முறையாக அனுமதி வாங்காமல் அறிமுக கூட்டம் நடத்தியதால் வழக்குப்பதிவு செய்யும்படி தேர்தல் அதிகாரி இளஞ்செழியன் அயனாவரம் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்படி அயனாவரம் போலீசார், அறிமுக கூட்டத்தை ஏற்பாடு செய்த வடசென்னை திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கராஜா உள்பட திமுக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதே போல தமிழகத்தில் அமமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.