சென்னை வரும் பிற மாநிலத்தவர்களுக்கு உதவும் நோக்கில் 6 மொழிகள் பேசத் தெரிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு உதவும் நோக்கில் பூக்கடை போக்குவரத்து தலைமைக் காவலரான ஜனார்த்தனன் பணி அமர்த்தப்பட்டுள்ளார். வேறு மாநிலங்களிலிருந்து வந்து வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு, அவர் உதவி வருகிறார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.