திருவாரூரில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனை கலைஞர் ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும். திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இது ஒன்றுதான் போதிய வசதியும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இருக்கும் ஒரே மருத்துவமனையாக விளங்குகிறது.
ஆனால், இதைச் சுற்றி, கழிவுநீரும், மருத்துவ கழிவுகளும், குப்பைகளும், புதர்களும் மண்டிய இடமாக காட்சியளிப்பதால், நோய் தீர்க்கும் மருத்துவமனையே நோயைப்பரப்பும் இடமாக காட்சியளிப்பதாக மருத்துவமனைக்கு வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடத்திலிருந்து குப்பைகளை அகற்றி மருத்துவமனையை சுத்தமாக வைத்துக்கொள்ள மருத்துவமனை நிர்வாகமும் அரசும் முயற்சிக்கொள்ளவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள சுட்டியை கிளிக்செய்யவும்...