தமிழ்நாடு

கடன் பிரச்னையை தீர்க்க ஏடிஎம்மை உடைத்த வாலிபர் 

கடன் பிரச்னையை தீர்க்க ஏடிஎம்மை உடைத்த வாலிபர் 

webteam

கடன் பிரச்சினையை தீர்க்க தனியார் வங்கி ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை முகப்பேர் கிழக்கு சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் வாலிபர் ஒருவர் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாக மும்பையில் உள்ள ஏடிஎம் மையத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து ஜெ.ஜெ. நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு வாலிபர் ஒருவர் சுத்தியியல், கடப்பாறை ஆகியவற்றை கொண்டு ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதையடுத்து அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்த போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி, அரூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பதும் நெற்குன்றத்தில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வந்த அவர் வியாபாரத்தில் 6 லட்சம் மேல் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை அடைக்க ஏடிஎம் எந்திரத்தை உடைத்து அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருந்ததும் தெரியவந்தது.