தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தேர்வு மத்திய அரசு சார்ந்தது - தமிழக அரசு பதில்மனு

webteam

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தேர்வு மத்திய அரசைச் சார்ந்தது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கில், தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு பெருந்துரை, செங்கல்பட்டு, மதுரை தோப்பூர், தஞ்சாவூர் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய இடங்களை மத்திய அரசு பார்வையிட்டதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுப்பிய பதிலில், தமிழகத்தில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்பது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் இடம் தேர்வை பொருத்தவரை முழுக்க முழுக்க மத்திய அரசு சார்ந்தது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்த மனுவை முடித்து வைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.