தமிழ்நாடு

நடுரோட்டில் வீச்சருவாளுடன் மிரட்டல் விடுத்த நபர் - வைரல் வீடியோ

நடுரோட்டில் வீச்சருவாளுடன் மிரட்டல் விடுத்த நபர் - வைரல் வீடியோ

webteam

மோகனூர் பகுதியில் ஒருவர் நடு ரோட்டில் வீச்சருவாளுடன் மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் நேற்று மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சோழிய முதலி தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அங்கிருந்தவர்களின் மீது வாகனத்தை ஏற்றுவது போல் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரைத் தட்டிக் கேட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து அவரது வீட்டிற்குச் சென்ற விக்ரம், வீட்டில் இருந்த வீச்சாருவாளை எடுத்து வந்து தட்டிக் கேட்டவர்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அரிவாளைக் காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் மோகனூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தப்பி ஓடிய ரவுடியை மோகனூர் போலீசார் தேடி வருகின்றனர்