தமிழ்நாடு

கடலூர்: மழை பாதிப்புகளை இணைந்து பார்வையிட்ட ஓபிஎஸ்-இபிஎஸ்..திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

கடலூர்: மழை பாதிப்புகளை இணைந்து பார்வையிட்ட ஓபிஎஸ்-இபிஎஸ்..திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

kaleelrahman

திமுக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆறுதல் தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இதன்பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், “திமுக அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் அனைத்துமே செய்துள்ளோம். பத்து நாளோ பத்து மாதமோ மக்கள் பாதிக்காமல் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்திடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. இதுவரை தனித் தனியாக மழை பாதிப்புகளை பார்வையிட்ட ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இன்று ஒன்றாக மழை பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.