தமிழ்நாடு

வாந்தி வருவதாக வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி எடுத்த விபரீத முடிவு

வாந்தி வருவதாக வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற மாணவி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

திருச்செங்கோடு அருகே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி சங்கர் (45). இவரது மனைவி சந்தனமாரி (35) இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் அர்ச்சனா என்ற 14 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மகள் அர்ச்சனா திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் வாந்தி வருவதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றவர் பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்துள்ளார். இதில், கால் எலும்பு முறிந்து வயிற்றில் பலமாக அடிபட்ட நிலையில் கிடந்த மாணவியை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.