மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2024 நவம்பர் மாதம் வரை 14,130 பேரை நாய்கள் கடித்துள்ளன.
2018இல் 3,986 பேரையும் 2023இல் 13,280 பேரையும் நாய்கள் கடித்துள்ளன. ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஆயிரம் பேர் நாய்க்கடிக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
வடக்கு மண்டலத்திலிருந்து மட்டும் தெருநாய் தொல்லை தொடர்பாக தினமும் சராசரியாக 3 அல்லது 4 அழைப்புகள் வருவதாகவும் மாநகராட்சியிடம் மூன்று நாய்பிடி வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் மாநகரட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். நாய்களுக்குக் கருத்தடை ஊசி போடுவதை அதிகரிக்கவும் செல்லூர், வெள்ளைக்கல் பகுதிகளில் உள்ள விலங்குகள் கருத்தடை மையங்களை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். நாய்பிடி வாகனங்களை அதிகரிப்பதற்கான முன்மொழிவும் விரைவில் அளிக்கப்படவிருக்கிறது.