தமிழ்நாடு

“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு

“இனி எந்த பெற்றோருக்கும் இப்படி நடக்கக்கூடாது” - திலகவதியின் பெற்றோர் மனு

webteam

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர் பாதுகாப்புக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மாணவி சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். 

வீட்டில் தனியாக இருந்த அவர், மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தன்னை யரோ கத்தியால் குத்திவிட்டதாக கூறி உதவிகேட்டார். இதனால் பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடிவந்த உறவினர் கஜேந்திரன் என்பவர், கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்த மாணவியை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் பெற்றோர் பாதுகாப்புக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், சம்பந்தபட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்று எந்த பெற்றோரும் பாதிப்படையக்கூடாது. அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரும் எஸ்பி சரவணனும் பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.