தமிழ்நாடு

நெல்லை: காதலியை பார்க்கவந்த காதலரை மிரட்டிய கூலிப்படையினர் 4 பேர் கைது!

நெல்லை: காதலியை பார்க்கவந்த காதலரை மிரட்டிய கூலிப்படையினர் 4 பேர் கைது!

sharpana

களக்காட்டில் காதலியை பார்க்க வந்த காதலரை வெடிகுண்டுகளுடன் மிரட்டிய கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விக்னேஷ் என்ற இளைஞர் களக்காடு சிங்கிக்குளம் அருகே தான் காதலிக்கும் பெண்ணை பார்க்க அடிக்கடி வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் விக்னேஷ் வந்த நிலையில் பெண்ணின் உறவினர்களும், கூலிப்படையைச் சேர்ந்த நான்கு பேரும் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் விக்னேஷை மிரட்டியுள்ளனர். இதனைப் பார்த்த களக்காடு காவல்துறையினர் கூலிப்படையினரைச் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.