தமிழ்நாடு

காவல் நி‌லையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

காவல் நி‌லையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

webteam

சேலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள், காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து, இருவ‌ரின் பெற்றோரையும் அழைத்துப் பேசிய காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

ஓமலூர் அடுத்த கலர்காடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் தங்களின் குடும்ப உறவினர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் இருவரும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது குறித்து விசாரித்த ஓமலூர் காவல் அதிகாரிகள் காதல் ஜோடிகளின் பெற்றோரை அழைத்து பேசி சமசரம் செய்து அனுப்பி வைத்தனர்.