தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சல்,டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில்
புதுக்கோட்டையில் மணமகனுக்கு டெங்கு காய்ச்சல் ஏறபட்டுள்ளதால் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (27). பரமக்குடி அருகே உள்ள கறம்பக்குடியைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் கூலி தொழிலாளியான பாண்டியனுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திருமணம் செய்ய நிச்சியதார்த்தம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மணமகன் பாண்டியனுக்கு கடந்த சில நாட்கள் முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகததால்
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை, இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.இதனைதொடர்ந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டியன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் எழு நாட்களாக காய்ச்சல் குணமாகததால் மருத்துவர்கள் அவர் காய்ச்சல் சரியாகிவிட்டால் மட்டுமே வீட்டிற்கு திரும்புவார் என கூறினர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள பாண்டியனுக்கும் ஜீவிதாவுக்கும் நேற்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது என தெரிவித்தனர். மேலும் பாண்டியனுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மணமகன் பாண்டியனின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.