சங்கர் புதியதலைமுறை
தமிழ்நாடு

ஒருவிரல் புரட்சியாளர்! வாக்கு செலுத்த ரூ.1 லட்சம் செலவுசெய்து ஜப்பானிலிருந்து சேலம் வந்த பொறியாளர்!

ஒருவிரல் புரட்சியாளர்! வாக்கு செலுத்த ரூ.1 லட்சம் செலவுசெய்து ஜப்பானிலிருந்து சேலம் வந்த பொறியாளர்!

Jayashree A

ஒருவிரல் புரட்சியாளர்

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். பொறியியல் பட்டதாரியான இவர் ஜப்பானில் பணியாற்றி வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக ஜப்பானில் வசித்து வந்த சங்கருக்கு அந்நாட்டு குடியுரிமை கிடைத்தும் அதனை ஏற்கவில்லை. தேசத்தின்மீது பற்றுக்கொண்ட அவர் தற்பொழுது தேர்தல் காலம் என்பதால் ஜனநாயக கடமையாற்ற தனது சொந்த ஊர் வந்துள்ளார்.

இதற்காக ஒரு லட்சத்திற்கு மேல் செலவானாலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் அங்கம் வகிப்பதே தனக்கு மனநிறைவை அளிப்பதாக கூறுகிறார். ஜனநாயக கடமையாற்ற கடல்கடந்து வந்த சங்கர் நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.