சட்டப்பேரவையில் ஒளவையார் குறித்து சுவாரஸ்ய விவாதம் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏவான ஓ.எஸ்.மணியன், வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ஐந்து ஔவையார்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாகவும், உறுப்பினர் எந்த ஒளவையாரை குறிப்பிடுகிறார்? என்றும் கேள்வி எழுப்பியதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.