தமிழ்நாடு

20 ஆண்டுகளுக்குப் பின் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு

JustinDurai

கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வரலாற்று பழமையும், பெருமையும் வாந்த விருத்தகிரீஸ்வரர் ஆலத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த கோவிலை காசிக்கு இணையான புனித தலமாக பக்தர்கள் கருதுகின்றனர். குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று இறைவனின் அருளை பெருவார்கள் என கருதப்படுகிறது.

முன்னேற்பாடாக ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடமுழுக்கை முன்னிட்டு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி, புனித நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து நிகழ்வுகளையும் நடத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: 45-வது புத்தகக் கண்காட்சி பிப்.16-இல் தொடக்கம் - மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்