தமிழ்நாடு

குட்கா வழக்கில் மாயமான முக்கிய ஆவணம்

குட்கா வழக்கில் மாயமான முக்கிய ஆவணம்

webteam

குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை ஒரு புறம் நடந்தாலும், காணாமல் போன முக்கிய ஆவணங்கள் குறித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.

தடையை மீறி தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய அனுமதி அளித்து அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறி வருமானவரித்துறை, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் அறிக்கை ஒன்றை அளித்தது. இதனை அடிப்படையாக வைத்தே குட்கா முறைகேடு வழக்கும் பதியப்பட்டது.

இந்த ஆவணங்கள் காணாமல் போனது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருந்தாலும் , ஆவணங்கள் காணாமல் போனது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடரும் என தெரிய வந்துள்ளது. சிபிஐயும் இந்த ஆவணங்கள் குறித்து விசாரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.