தமிழ்நாடு

மதுபான கடைக்கு எதிராக போராடிய இளைஞர் கைது ! போலீஸை கண்டித்த நீதிபதி

webteam

மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பதாகை வைத்த இளைஞரை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதை கண்டித்து, "தமிழ்நாடா குடிகார நாடா" என்ற தலைப்பில் இளைஞர்கள் சிலர் பதாகை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை விளம்பரப் பதாகை வைத்த செல்லப்பாண்டியன் என்ற இளைஞரை கொரடாச்சேரி போலீசார் கைது செய்தனர்.  

மேலும் அவர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை வைத்தது தவறா என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினர். பின்பு இளைஞரை கைது செய்து காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து இளைஞரை தனது சொந்த ஜாமினில் நீதிபதி விடுதலை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.