தமிழ்நாடு

வத்தலகுண்டு: பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

வத்தலகுண்டு: பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

JustinDurai
திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த சரவணன், அவரது மனைவி லட்சுமி இருவருக்கும் அவ்வப்போது தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமி, சித்தூர் செல்லும் சாலை அருகே தனியார் தோட்டத்தில் இருந்த கிணற்றில் இரு குழந்தைகளையும் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறு காரணமாக லட்சுமி இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)