விடுமுறையே எடுக்காமல் அலுவலகம் செல்பவரா நீங்கள்... ஒருவேளை விடுமுறையில் சென்றாலும் அலுவலகத்துடன் தொடர்பிலேயே இருக்கிறீர்களா.. அப்படியென்றால் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லதல்ல என்கின்றன ஆய்வுகள்.
குறிப்பிட்ட இடைவேளையில் விடுப்பு எடுத்து தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வது மிகவும் நல்லது என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளன.
இன்றைய தொழில்நுட்ப உலகில், அலுவலகத்தில் இல்லை என்றாலும், அலுவலக வேலைகளை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால், தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களும் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. வாழ்வதற்காகவே வேலை... வேலைக்காக வாழ்க்கையில்லை... இதை உணர வேண்டும் என்பதையே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.