தமிழ்நாடு

அரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் : மனைவி புகார்

அரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் : மனைவி புகார்

webteam

கோவையில் அரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த அரசு ஊழியரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மேட்டுப்பாளையம் தாலுக்கா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாக பாலமுருகன் உயிரிழந்ததாக கூறப்படுவதை மறுக்கும் குடும்பத்தினர், அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி பாலமுருகன் கல்லார் பகுதியில் அலுவலக கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது பாலமுருகனை அடையாளம் தெரியாத சிலர் தாக்கினர். மேலும் செல்போன், ஹெல்மெட், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். அவரை சிலர் தாக்கியதில் பிறப்பு உறுப்பில் கடுமையான வழி இருந்ததாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளனார். தனது பணிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பாலமுருகன் மறுத்ததாக குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இதற்கிடையில் பிறப்பு உறுப்பில் வீக்கம், காயம் இருந்ததை அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையின் போது உறுதி செய்துள்ளனர். இதனால்தான் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். மருத்துவர்கள் பாலமுருகன் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார் என்று முன்னுக்குபின் முரண்பாடாக தெரிவித்துள்ளது குடும்பத்தினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எனவே பாலமுருகன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து வருகிறார்.