தமிழ்நாடு

முகநூல் நட்பை நம்பிய பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

முகநூல் நட்பை நம்பிய பெண்ணுக்கு நடந்த கொடுமை..!

webteam

முகநூலில் இளம்பெண்களோடு நட்பு வைத்து, அவர்களை‌ மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த கும்பல் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளது. முகநூலில் பழகிய ஏராளமான பெண்களை காதலில் விழ வைக்கும் இவர்கள், பணம் பறிக்கும் சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சியில் வசித்துவரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் அறிமுகம் ஏற்பட்டது. கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை கடந்த 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்‌ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு தலைமறைவாக உள்ள நிலையில், காவலர்கள் அவரைத் தேடி வருகின்றனர்.