TVK Candidates  web
தமிழ்நாடு

பொய்ச் செய்திகளைப் பரப்பும் தவெக.. ஆதாரத்துடன் கூறிய தி இந்து!

தவெக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு முதல் பிஹெச்டி வரை படித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவும் உண்மையில்லை என்பது தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலமே தெரியவந்துள்ளது.

Prakash J

தேர்தலுக்கு முன்பும், விஜய் முதல்வரான பிறகும் தமிழக வெற்றிக் கழகம், சமூக வலைத்தளங்களில் பல பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, தி இந்து ஊடக நிறுவனம் ஆதாரத்துடன் விமர்சித்துள்ளது.

தவெகவில் 25க்கும் மேற்பட்ட பட்டியலின வேட்பாளர்கள் பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றதாக தகவல்கள் பரவின. ஆனால், சங்கராபுரம் பொதுத் தொகுதியில் மட்டுமே தவெக சார்பில் பட்டியலின வேட்பாளர் நிறுத்தப்பட்டதாகவும், அவரும் தேர்தல் முடிவில் 3ஆம் இடமே பிடித்துள்ளார் என்றும் தி இந்து நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தவெக வேட்பாளர்கள் பலரும் ஏழைகள் என்றும், டீக்கடை உரிமையாளர், ஆட்டோ ஓட்டுநர் போன்றோர் எம்எல்ஏ ஆகியிருப்பதாகவும் செய்தி பரப்பப்பட்டது.

TVK Candidates

கூடவே, தவெக வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பட்டப்படிப்பு முதல் பிஹெச்டி வரை படித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவும் உண்மையில்லை என்பது தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலமே தெரியவந்துள்ளது. முக்கியமாக, தவெக ஆட்சியில்தான் முதல் பெண் அமைச்சர் பொறுப்பேற்றதாக பகிரப்படும் தகவல்களும் அடிப்படை அறமற்றது என தி இந்து ஊடகம் விமர்சித்துள்ளது. முக்கியமாக, விஜயின் முதல்வர் இருக்கையில் வெள்ளை டவல் இல்லை என்பது ஏற்கெனவே கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கடைபிடித்த நடைமுறைதான் என்பதையும், முதல்வர் அறையில் அமர்ந்தபடியே விஜய் உணவு சாப்பிடுவதாக வெளியான புகைப்படம், ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதையும் இந்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல், தவெக தொடர்பான பெரும்பாலானசெய்திகளிலும், பொய்யான தகவல்கள்இணைக்கப்படுவதாக தி இந்து ஊடகம்ஆதாரங்களுடன் விமர்சித்துள்ளது.