Nepal second flood wave  Reuters
தமிழ்நாடு

இயற்கைச் சீற்றங்களால் அழியும் 22 மொழிகளின் பாரம்பரியம்.. மறைந்துவரும் ‘புரட்டாசி மழை' சொல் பயன்பாடு!

புவி வெப்பமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தால், இந்திய மொழிகளில் இயற்கை சார்ந்த நூற்றுக்கணக்கான வார்த்தைகள் பயன்பாட்டில் இருந்து மெல்ல மறைந்து வருவதாக ‘லூஸிங் வேர்ட்ஸ், லூஸிங் வேர்ல்ட்ஸ் என்ற புதிய ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

PT WEB

தமிழகம், மஹாராஷ்டிரா, அஸாம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பேசப்படும் 22 மொழிகளில் இயற்கைச் சூழலை விவரிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. தமிழில் சம்பா சாகுபடி, நண்டு இனப்பெருக்கத்துக்கு முக்கியமான ‘புரட்டாசி மழை’ என்ற சொல், கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் மழை பொய்த்ததால் பயன்பாடு குறைந்து மறைவின் பாதையில் செல்கிறது.

தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, அஸாம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 22 மொழிகளில் உள்ள சுமார் 100 இயற்கை சார்ந்த சொற்கள் அழியும் தருவாயில் உள்ளன. குறிப்பாகத் தமிழில், சம்பா சாகுபடிக்கும் நண்டு இனப்பெருக்கத்துக்கும் உகந்த 'புரட்டாசி மழை' என்ற சொல், கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு ஆண்டுகள் மழை பொய்த்ததால் தன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

இதேபோல், நிக்கோபாரி மொழியில் 'டாம்ரா' என்றால் அமைதியான கடல், புந்தேலி மொழியில் 'ஓஸ் கி நமி' என்றால் பனித்துளி ஈரம், அஸாமிய மொழியில் 'பீலோர் கோதூளி' என்றால் அந்திப் பொழுது என இயற்கை சார்ந்த பல அழகிய சொற்கள் அழியும் அபாயத்தைச் சந்தித்துள்ளன.

மழை

மறுபுறம், திடீர் மழைக்கு 'பினா நிஷான்' போன்ற புதிய சொற்களும் உருவாகி வருகின்றன. தமிழிலும், காலநிலை மாற்றம், புவிவெப்பமாதல் போன்ற சொற்கள் உருவாகியிருக்கின்றன.

தமிழ் ஒரு சூழலியல் மொழி. நம் சங்க இலக்கியம் மாபெரும் சூழலியல் இலக்கியம். ஆனால், காலநிலை மாற்றத்தால் இயற்கை தொடர்பான சொற்கள் நம் மொழியிலிருந்து மெல்ல மறைவது வருத்தத்துக்கு உரியது. இது இந்திய மொழிகள் பலவற்றிலும் நிகழ்கிறது. மொழியைப் பாதுகாக்காமல் அந்த மொழி பேசும் சூழலில் உள்ள இயற்கையைப் பாதுகாக்க முடியாது. ஆகவே, உள்ளூர் மொழிகளின் சூழலியல் சொற்களையும் பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.