தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: ஒரு மாத ஊதியத்தை நிவாரணத்துக்கு வழங்கிய காவலர் பாபு!

கொரோனா கால மகத்துவர்: ஒரு மாத ஊதியத்தை நிவாரணத்துக்கு வழங்கிய காவலர் பாபு!

kaleelrahman

கோவை மாவட்ட ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை அப்படியே முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் தனது ஏப்ரல் மாத முழு ஊதியம் ரூ.34,474-ஐ முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கொரோனா பிடியில் இந்திய நாடே சிக்கி பரிதவித்து வரும் நிலையில், தமிழகத்திலும் மோசமான நிலை நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு கடந்த ஆண்டு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய ஆயுதப்படை முதல்நிலை காவலர் பாபு, இந்த ஆண்டும் தனது ஒரு மாத சம்பளமான சம்பளத்தை வழங்கியது நெகிழவைத்துள்ளது.