தமிழ்நாடு

சென்னையிலே இப்படி ஒரு நிலமையா..?

webteam

சென்னைக்குட்பட்ட கல்வி மையங்களில் மட்டும் சுமார் ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அரசு சார்பில் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 26 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சென்னைக்குட்பட்ட கல்வி மையங்களில் மட்டும் சுமார் ஆயிரம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி சென்னைக்கு உட்பட்ட10 கல்வி மண்டலங்களில் 819 குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. 6 முதல் 16 வயதிற்குட்பட்ட 454 சிறுவர்களும், 365 சிறுமிகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. 

விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை எனக் கூறப்படுகிறது. வளர்ச்சியடைந்த நகரமான சென்னையிலேயே பள்ளி செல்லா குழந்தைகள் 800க்கும் மேற்பட்டோர் இருப்பதால், மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.