தமிழ்நாடு

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைப்பு - தமிழக அரசு

JustinDurai

10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற  அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு. 

10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது தமிழக அரசு.  

மாணவர்களின் நலன் கருதி, பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

கடந்த 24 ஆம் தேதி வெளியிடப்பட்ட  மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு கூட்டத்திற்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.