தமிழகத்தில் இனி வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும், ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை 10 மாதங்களுக்குள் விற்கவும் பொதுப்பணித்துறை முடிவெடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் கொள்கை முடிவெடுத்தது. இது முடிவுக்கு வரும் நிலையில், மணல் தேவையை பூர்த்தி செய்ய தமிழகத்திலேயே கூடுதல் மணல் குவாரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எண்ணூர், காட்டுப்பள்ளி, மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மலேசிய மணலை அடுத்த 10 மாதங்களுக்குள் விற்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நான்கு துறைமுகங்களிலும் விற்கப்படாமல் தேங்கியிருக்கும் சுமார் 18 ஆயிரத்து 616 மெட்ரிக் டன் மணலை அடுத்தாண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விற்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.