தமிழ்நாடு

புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணி: எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணி: எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

rajakannan

பெருநகர் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்துகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

உலக வங்கியின் ‌ 6 கோடியே 43 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆளில்லா வானூர்தி மூலம் தயாரிக்கப்படவுள்ள புவிசார் தகவல் வரைபடத்துடன் நிலை உயர்த்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் மேலாண்மை தகவல் புள்ளி விவரங்கள் இணைக்கப்படவுள்ளன. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வரைபடம் தயாரிக்கும் பணியை 120 நாட்களில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.