திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவர், தான் சம்பாதித்த 4 கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பாத்திரத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவருக்கு மனைவி கஸ்தூரி மற்றும் சுபலட்சுமி ராஜலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், கோவில் உண்டியலில் சொத்து பத்திரத்தை காணிக்கையாக செலுத்தியதால் தனது மனைவி கஸ்தூரி மற்றும் மைத்துனர்கள் ஆகியோர் கொலை மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உண்டியலில் விஜயன் காணிக்கையாக செலுத்திய வீட்டு பத்திரமும் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் உண்டியல் எண்ணும் இடத்தில் விஜயன் மனைவி மகள்கள் குடும்பத்துடன் காத்துக் கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சொத்து பத்திரம் கோவிலுக்கு சேர வேண்டும் என்று பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.