தமிழ்நாடு

உதகை ரோஜா பூங்காவில் நாளை மலர் கண்காட்சி

JustinDurai

தெற்காசியாவில் புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கண்காட்சி என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 1995ஆம் ஆண்டு உதகை மலர் கண்காட்சியின் 100ஆவது ஆண்டு நினைவாக உதகை அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இங்கு 31ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளைக் கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்கும் ரோஜாக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக வரும் 14, 15ஆம் தேதிகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்கலாம்: வால்பாறை: கோழி வளர்ப்புக்கூண்டில் கால்கள் சிக்கிய நிலையில் இறந்துகிடந்த சிறுத்தைப்புலி