தமிழ்நாடு

வேதாரண்யத்தில் மூன்றாவது நாளாக கடல் சீற்றம்!

வேதாரண்யத்தில் மூன்றாவது நாளாக கடல் சீற்றம்!

webteam

வேதாரண்யம் கடற்பகுதியில் கடல்சீற்றம் கடுமையாக உள்ளதால் 3 வது நாளாக ஐந்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் கடுமையாகவும் பலத்தக் காற்றும் தொடர்ந்து வீசி வருவதால் ஆறுகாட்டுத்துறை கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் வானவன் மகாதேவி உள்ளிட்ட பத்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்தாயிரம் மீனவர்கள், மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். 
இதனால் 800க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மேட்டுப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடல்சீற்றம், காற்று, புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் போது மீனவர்கள் படகுகளை நிறுத்த வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் முள் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.