தமிழ்நாடு

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ: 3 நாள் போராட்டத்திற்குப் பின் அணைப்பு

JustinDurai

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வந்த தீ, தொடர் முயற்சியால் அணைக்கப்பட்டுள்ளது.

பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. திறந்தவெளி என்பதாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீ வேகமாகப் பரவியது. 15 ஏக்கரில் தீ பரவிய நிலையில், 100க்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் மூலம் 90 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3 நாட்களாக தீயை அணைக்க போராடி வந்தனர்.

இதனால் பெருங்குடி மட்டுமல்லாது சுற்றியுள்ள துரைப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளிலும் புகை மூட்டம் சூழ்ந்தது. மூச்சுத் திணறல், கண்ணெரிச்சல் என அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதியடைந்து வந்தனர். நேற்று வரை பயங்கரமாக புகை வெளியேறிய நிலையில் தற்போது தீ முழுவதும் அணைக்கப்பட்டது. புகை பரவாமல் தடுக்க குப்பைகள் மீது மண்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 3 நாட்களாக புகை மண்டலத்தில் வசித்து வந்ததால் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்கலாம்: மின்வெட்டு பிரச்னையில் தவறான தகவல்களை கொடுக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி