தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு - விரைவில் இறுதி குற்றப்பத்திரிகை

webteam

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமி மீது முதற்கட்டமாக கடந்த ஜூலை 16ஆம் தேதி 1160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் மற்றும் இறுதி குற்றப்பத்திரிகையை செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. 

இதனையடுத்து சுமார் 500 பக்கங்களை கொண்ட இறுதி குற்றப்பத்திரிகை 10 நாட்களுக்குள் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபின் வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.