சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர், தடையை மீறி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவி அனிதா மரணத்திற்கு காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் முழக்கமிட்டனர். இதையடுத்து மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.