தமிழ்நாடு

உடல்நலக்குறைவால் பெண் யானை விவசாயத் தோட்டத்தில் தஞ்சம்

உடல்நலக்குறைவால் பெண் யானை விவசாயத் தோட்டத்தில் தஞ்சம்

webteam

கோவை கரடிமடை மலையடிவாரப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில்‌‌‌ உடல்நலக் குறைவு காரணமாக பெண் யானை ஒன்று தஞ்சடைந்துள்ளது. 

கரடிமடைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்திற்குள் இன்று காலை புகுந்த பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால், அந்த பெண் யானையை மற்றொரு பெரிய யானையும், குட்டியானையும் சுற்றி வந்தன. அதனால் உடல்நலக்குறைவுடன் இருக்கும் பெண் யானையை வனத்துறையினரால் நெருங்க முடியவில்லை. எனவே, இரு யானைகளையும் பட்டாசு வைத்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 

மேலும் பெண் யானையை சுற்றியுள்ள 2  யானைகளையும் விரட்டிய பின்னரே, தோட்டத்தில் உள்ள யானைக்கு சிகிச்சை அளிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.