தமிழ்நாடு

மனைவி இல்லாத சோகம் ! குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தந்தை

மனைவி இல்லாத சோகம் ! குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய தந்தை

webteam

நாமக்கல் அருகே தனது இரு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சசிகலா என்பவருடன் திருமணமாகி வீரபத்ரன் (7) என்ற மகனும், விஜயா (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சசிகலா உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தனது மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீளாத ராஜகோபால் தனிமை விரும்பியாக இருந்து வந்த நிலையில் இன்று தன் தோட்டம் அருகே உள்ள வேப்பம் மரத்தில் தனது இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி 3 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராஜகோபால் தனது இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். எனினும் அவர்களை தாயில்லாமல் முறையாக பராமரிப்பு செய்ய இயலாததால், தனது இரு குழந்தைகளையும் மரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டிதொங்க விட்டு, பின்னர் அவரும் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. தனது இரு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.