தமிழ்நாடு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக்கு எதிர்ப்பு... மலைவாழ் மக்கள் அடையாள போராட்டம்

kaleelrahman

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள் அடையாள போராட்டம்.

சமீபத்தில் மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 சட்டத்தில் பல திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மலைவாழ் மக்கள்  கூட்டமைப்பினரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.

கொடைக்கானல் மூலையாறு கிராமம் உட்பட மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் ஆதிக்குடிகள், ஈஐஏ 2020 வரைவிற்கான எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தி, ஒருநாள் அடையாள போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதே போல, ஜவ்வாது மலை, திருத்தணி பொன்மாரி கிராமம், திண்டுக்கல் மலை கிராமம், மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஈஐஏ 2020 சட்ட திருத்தத்திற்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி, மத்திய அரசை கண்டித்தும், இச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் முழக்கமிட்டனர். பின்பு 2006 வன உரிமைச்சட்டத்தின் படி ஆதிவாசி மக்களுக்கு வன நிலங்களை விவசாயம் செய்ய கொடுக்க கோரியும் போராட்டம் செய்தனர்.