மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முழு கட்டுமானத்தையும் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அதன் இயக்குநர் அறிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும், முதல்கட்டத்தில் கல்வி வளாகம், வெளி நோயாளர் மருத்துவ சேவைகள், தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டடங்கள் அடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோப்பூரில், 220 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம், இரண்டு கட்டங்களாக நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டுமானத்தில் 24 சதவீத பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், நடப்பாண்டு அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அதன் நிரந்தர வளாகத்திற்கு மாற்ற முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.