தமிழ்நாடு

தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானைகள்

webteam

நீலகிரி மாவட்டம் கெத்தை வனப்பகுதியில் விலங்குகளுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை தென்படுவதால், யானைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது‌.

கேரள வனப்பகுதியிலிருந்து ஏராளமான யானைகள் தமிழக வனப்பகுதிகளான கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி, அத்திக்கடவு வனப்பகுதிகளுக்கு அடிக்கடி இடம் பெயர்ந்து வருகின்றன. இங்கு யானைகளுக்கு தேவையான உணவும் தண்ணீரும் கிடைப்பதால் இவை அடிக்கடி இடம் பெயர்வதாக தெரிகிறது. இவ்வாறு இடம் பெயரும் போது அவை சாலையை கடந்தே செல்கின்றன. இதனால் தேயிலை தொழிலாளர்களும், அவ்வழியாக பயணிப்பவர்களும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.