புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு ரூ. 16 லட்சம் மதிப்பில் கல் பதித்த பாதம் தங்க ஆபரணத்தை காணிக்கையாக வழங்கினார்
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகாய தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு உள்ளே நடராஜருக்கு அருகே அமைந்துள்ள இடதுபுறம் உள்ள சிவகாமசுந்தரி அம்மனுக்கு மும்பையைச் சேர்ந்த சேகர் என்ற பக்தர் ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் கொண்ட இரண்டு கல் வைத்த பாத தங்கக் கவசத்தை நன்கொடையாக அளித்து உள்ளார்.
அந்த இரண்டு கல் வைத்த பாத கவசங்களையும் நடராஜர் கோவில் பொது தீட்சதர்கள், டிரஸ்டி ராஜசேகர தீட்சதர், கிருபாகர தீட்சதர் மற்றும் பொது தீட்சிதர்கள் நடராஜர் சிவகாமி சுந்தரி அம்மன் சந்நிதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து இரண்டு கல்லான பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் வைத்த தங்க பாத கவசத்தை சிவகாம சுந்தரி அம்மனுக்கு அணிவித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, அதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.