தமிழ்நாடு

கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் கீழ் குறைந்த அரசுப் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை!

கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் கீழ் குறைந்த அரசுப் பேருந்து பயணிகளின் எண்ணிக்கை!

JustinDurai
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை பாதிக்கும் கீழ் குறைந்திருப்பதாக போக்குவரத்துத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கை விளக்கக் குறிப்பு தகவலின்படி, 2011 - 12 ஆம் ஆண்டு அரசுப் பேருந்துகளில் பயணிப்போரின் தினசரி எண்ணிக்கை 2 கோடியே எட்டு லட்சத்து 36 ஆயிரமாக இருந்தது. 2020 - 21 ஆம் ஆண்டு 73 லட்சத்து 64 ஆயிரம் பேர் தான் அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இந்த எண்ணிக்கை பத்தாண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையை விட பாதிக்கும் குறைவு ஆகும்.