தமிழ்நாடு

மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி

மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் குப்பைகள் : புகையால் நோயாளிகள் கடும் அவதி

webteam

ஓசூர் அரசு மருத்துவமனையில் குப்பைகளுக்கு தீவைப்பதால் பச்சிளங் குழந்தைகளும் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள்,முதியோர்கள், கற்பினி பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் யென அனைவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்து கழிவுப் பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து பச்சிளம் குழந்தைகள் இருக்கும் அறையின் பகுதி அருகே கொட்டப்படுகிறது இதை முறையாக அப்புறப்படுத்த வேண்டிய மருத்துவ மனை நிர்வாகம் அவ்வப்போது இரவுநேரங்களில் தீயிட்டு எரிக்கப்படுகிறது.

இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் புகையால் சூழ்ந்து காணப்படுவது மட்டுமின்றி அனுமதிக்கப்பட்ட நோயாளிகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர் மேலும் அருகிலுள்ள பிறந்த பச்சிளம் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுத்திணறல் அவதிப்படுகின்றனர். இதை மருத்துவமனை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.