தமிழ்நாடு

கந்து வட்டியால் உயிரிழப்பு என புகார்: சடலத்துடன் சாலை மறியல்

கந்து வட்டியால் உயிரிழப்பு என புகார்: சடலத்துடன் சாலை மறியல்

webteam

அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளம் கிராமத்தில் கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்ததாக கூறி, சடலத்துடன் சாலை‌மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தவுத்தாய் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் , ராமசந்திரன் என்பவரிடம் 20ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். வட்டியுடன் கடனை திருப்பி செலுத்திய போதும், அண்ணாதுரை எழுதி கொடுத்த பத்திரத்தை வைத்து ராமசந்திரன் மிரட்டி‌தாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த அண்ணாதுரை நேற்றிரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார். அதனையடுத்து, ராமசந்தி‌ரன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி அண்ணாதுரையின் உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். 

இதனால், அரியலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்‌கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.