தமிழ்நாடு

‘நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது’ - ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி

EllusamyKarthik

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. 

இதில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியில்லை என்றும் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக அரசின் ஆணை தொடரும் என்றும் தீர்ப்பில் தெரிவித்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் பேட்டியளித்துள்ளார்.

‘ஸ்டெர்லைட் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மறைமுகமாக ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறி போய் உள்ளது. அரசு தொழிற்சாலைகளை துவங்குவதை ஊக்குவிக்கும் நேரத்தில் எங்களை போன்ற ஆலைகளை மூடவும் காரணமாகிறது. இந்தியாவின்  காப்பர் தேவையில் 40 சதவீதம் உற்பத்தி செய்து வந்தோம்.

ஆனால் நாட்டில் தற்போது 2 பில்லியன் டாலர் அளவிற்கு காப்பர் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.