தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு‌ குடிசைப்பகுதிகளை அகற்ற தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

webteam

ஆக்கிரமிப்பு குடிசைப்பகுதிகளை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு இடைக்காலத்தடை விதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட 22 குடிசைப்பகுதிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில், 36 குடிசைப்பகுதிகளை அகற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறுவதாகவும், அதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் பெண்ணுரிமை இயக்கத்தின் சார்பில் லீலாவதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

மாற்றிடத்துக்கு செல்ல தயங்குபவர்களை மாநகராட்சியினர் மிரட்டுவதாகவும் மனுவில் கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்விவகாரத்தில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்ததுடன், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.