கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு பதவியேற்க வந்த தாயை கண்டு கண்ணீர் விட்ட மகன். மீண்டும் தாயை காவல்துறை பாதுகாப்போடு ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றதால் சோகத்தில் முழ்கினார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை பரவை பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும், திமுகவைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும், 1 சுயேட்சை உறுப்பினரும் பதவியேற்றனர்.
முன்னதாக மதுரை பரவை பேரூராட்சியைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு தொடர்ந்த வழக்கில் காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அதிமுக உறுப்பினர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை பரவை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு வந்த 8வது வார்டு உறுப்பினர் மாரியம்மாள் பார்த்த அவரது 13 வயது மகன் ரோஷன், ஒரு வாரத்திற்குப் பிறகு தனது தாயை கண்டதும் கண் கலங்கினான். தொடர்ந்து மகனிடம் இன்று மாலையே மீண்டும் வந்து விடுவேன் என கூறிய மாரியம்மாள் அவனுக்கு ஆறுதல் கூறினார்.
ஆதனைத் தொடர்ந்து அதிமுக வார்டு உறுப்பினர்களுடன் மாரியம்மாள் காவல்துறை பாதுகாப்புடன் காரில் சென்ற நிலையில், மாரியம்மாளின் பெற்றோர் சிறுவன் ரோஷனை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.