தமிழ்நாடு

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம்! 

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம்! 

JustinDurai

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அவ்வகையில் கடந்த வாரம் திமுக தரப்பில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையினை தயாரிக்க டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 2021- சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.