தமிழ்நாடு

கரையோரப் பகுதி மக்கள் தரைப்பாலங்களைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை

கரையோரப் பகுதி மக்கள் தரைப்பாலங்களைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை

webteam

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் நீர்பெருக்கெடுத்து ஓடு‌வதால் கரையோரப் பகுதி மக்கள் தரைப்பாலங்களைக் கடக்க வேண்டாம் என வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2,266 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்தக் கொள்ளளவான 44.2‌ அடியில், 42.97 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,008 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் அதிகமான தண்ணீர் செல்வதால் கரையோரப் பகுதிகளான பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், ஆலியாளம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 6வது நாளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.