தமிழ்நாடு

வேதாரண்யம்: ரோந்துக் கப்பல் மோதி மீனவர்கள் காயம்; நலம் விசாரித்த கடலோர காவல் படையினர்

வேதாரண்யம்: ரோந்துக் கப்பல் மோதி மீனவர்கள் காயம்; நலம் விசாரித்த கடலோர காவல் படையினர்

JustinDurai
படகு மீது ரோந்துக் கப்பல் மோதியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்றிரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையின் கப்பல் மீனவர்களின் படகு மீது மோதி இழுத்துச் சென்றது. இதில் நிலை தடுமாறி கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய செல்வமணி என்ற மீனவரை சக மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். சம்பவத்தில் மகாலிங்கம் என்ற மீனவரும் காயமடைந்தார்.
நிகழ்வு தொடர்பாக கடலோர காவல்படையினர் புஷ்பவனம் கிராமத்திற்குச் சென்று விவரங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள், வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர்கள் 2 பேரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.